பினாங்கில் ஒரே நாளில் 3 தீ விபத்துக்கள் தீயணைப்புத் துறையினர் பரபரப்பு!

சமூகம்
Typography

ஜோர்ஜ் டவுன், செப்.14- பினாங்கில் வெவ்வேறு இடங்களில் ஆறு மணி நேரத்திற்குள் நடந்த மூன்று தீ விபத்துக்களினால் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பெரும் பரபரப்புக்கு உள்ளாயினர்.

சிந்தரா ஸ்திரீட், கோட்ரிங்டன் அவென்யூ மற்றும் ஜாலான் டத்தோ ஓ சோய் சேங் ஆகிய இடங்களில் இந்தத் தீ விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 

செவ்வாய்க்கிழமையன்று மட்டும் நடந்த இந்தத் தீ விபத்தில் சிந்தரா ஸ்திரீட்டில் 4 கடை வீடுகள் தீயில் அழிந்தன. மேலும், மதியம் 2 மணியளவில் அதன் பக்கத்தில் அமைந்திருந்த கோட்ரிங்டன் அவென்யூ என்ற தங்கும் விடுதியில் பாதி தீயில் அழிந்தது. 

ஒவ்வொரு இடத்திலும் தீயைக் கட்டுப்படுத்த இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பிடித்தது. அதிஷ்டவசமாக இந்தத் தீ விபத்துக்களில் எத்தகைய உயிர்ச் சேதங்களும் இல்லை எனத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை பேச்சாளர் முகமட் அஸ்மான் ஹுசேன் தெரிவித்தார்.

புக்கிட் மெர்தாஜாம், ஜாலான் டத்தோ ஓ சோய் சேங்கில் நிகழ்ந்த மூன்றாவது தீ விபத்தில் இரட்டை மாடிக் கடை வீடு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றடைவதற்கு முன்பே மேல்மாடி முற்றிலும் எரிந்துவிட்டது. 

கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு படையினர் மதியம் 3.47 மணியளவில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

BLOG COMMENTS POWERED BY DISQUS