சமயப் பள்ளியில் தீ: 2ஆவது மாடியில்  எல்லா உடல்களும் கருகிய நிலையில்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், செப்.14-  ஜாலான் டத்டோ கிராமட்டிலுள்ள சமயப் பள்ளி ஒன்றில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் நிகழ்ந்த கோரத் தீ விபத்தில்  24 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்கள் அனைத்தும் பள்ளியின் இரண்டாவது மாடியில் கண்டெடுக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் உயிரிழந்த 24 பேரில் 22 பேர் மாணவர்கள் என்றும் 2 பேர் ஆசிரியர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட அறுவர் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீயணைப்பு துறையினர் 14 மாணவர்கள் மீட்டு விட்டதாகவும் 4 ஆசிரியர்கள் தீயிலிருந்து தப்பித்து விட்டனர் என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ அமர் சிங் கூறினார்.

இதுவரை இந்தத் தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இறந்தவர்களின் உடல்கள் ஒன்றோடு ஒன்று குவிக்கப்பட்டிருப்பதால் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்று அவர் கூறினார்.

இந்த சமயப்பள்ளிக்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. இந்தத் தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப் படவில்லை என்று டத்தோ அமர்சிங் சுட்டிக் காட்டினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS