குலசேகரன் நியமனம்: எதிர்க்கட்சி  கூட்டணியின் சரியான முடிவு –அம்பிகா!

சமூகம்
Typography

 

 கோலாலம்பூர், செப்.14- எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானில் உதவித் தலைவர்கள் பதவிக்கு எம்.குலசேகரனையும், சபாவைச் சேர்ந்த கிறிஸ்தியன் லியூவையும் நியமனம் செய்திருப்பது ஒரு சரியான நடவடிக்கை என்று ‘ஹக்காம்’ அமைப்பின் தலைவர் டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். 

பக்காத்தான் ஹராப்பானின் தலைமைத்துவத்திற்கு இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டிருப்பதன் வழி சரியான பாதையில் எதிர்க்கட்சிக் கூட்டணி பயணிக்கத் தொடங்கி இருக்கிறது என்று மனித உரிமை வழக்கறிஞருமான டத்தோ அம்பிகா கூறினார்.

எல்லா இனத்தைச் சேர்ந்தவர்களையும் ஒன்றிணைத்துக் கொள்வதானது ஒரு நல்ல தொடக்கமாக அமையும். உதவித் தலைவர்கள் பதவிக்கு அதிகமானவர்களை நியமிப்பது ஒரு நல்ல யோசனையாக அமையாது என்றாலும், குறைந்தபட்சம் அது குறித்து பரிசீலித்து ஒரு முடிவை பக்காத்தான் ஹராப்பான் எடுத்திருப்பது பாராட்டத்தக்கது என்றார் அவர்.

 எதிர்க்கட்சி கூட்டணியில் இந்திய சமுதாயத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதாக டத்தோ அம்பிகா அண்மையில் விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS