கங்கையில் குப்பை போடுவோரை படம் பிடித்துத் தந்தால் ரொக்கப் பரிசு!

சமூகம்
Typography

 

ருத்ரபிரயாகை, செப்.14- கங்கை நதியைத் தூய்மையாக்கும் திட்டத்தின் கீழ், நதியில் குப்பைப் போடுபவர்களைப் புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு பரிசு வழங்க, உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ருத்ரபிரயாகை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ருத்ரபிரியாகை பகுதியில்ல, கங்கை நதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில், குப்பைப் போடுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ருத்ரபிரியாகை மாநகராட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து,  மாவட்ட ஆட்சியர் மங்கேஷ் கில்டியாள் கூறியதாவது: நதியில் குப்பைப் போடுவோர் மீது வழக்குப் பதிவு செய்து, சிறைத்தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நதி மற்றும் கரையோரங்களில் குப்பைப் போடுபவர்களைப் புகைப்படம் எடுத்து, அனுப்புவோருக்கு, 500 ரூபாய் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS