கைத்தெலைப்பேசி களவாடிய திருடனை துரத்திப் பிடித்த ஆடவர்!

சமூகம்
Typography

காஜாங், செப்.14- சுமார் 37 வயதுடைய வாகனமோட்டி ஒருவர் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் தனது கைத் தொலைப்பேசியை அபகரித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய திருடனைத் விரட்டிப் பிடித்தார். 

தனது வாகனத்தின் ஜன்னல் திறந்த நிலையில் ,புகைப்பிடித்துக் கொண்டிருந்த அந்த ஆடவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பேச முயன்றனர் என்று காஜாங் ஒசிபிடி  அமாட் டிஸாபிர் முகமட் யூசோப் கூறினார்.  

அந்த நபர்களில் ஒருவர் வாகனத்தின் கைத்தொலைப்பேசி வைக்குமிடத்திலிருந்த அவரது கைத்தொலைப்பேசியை அபகரித்துக் கொண்டு அந்த, இருவரும் மோட்டார் சைக்கிளில் ஓட்டம் பிடித்தனர்.

அந்த ஆடவர் உடனே தனது காரில் துரத்திச் சென்று பண்டார் துன் ஹுசேன் ஓன்னில் அமைந்திருக்கும் உணவகத்தின் அருகில் தனது காரினால் அந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளினார் என்று ஏசிபி அமாட் டிஸாபிர் தெரிவித்தார்.

அவர் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே விழுந்து கிடந்த திருடர்களை கையும் களவுமாக பிடிக்க, அவர்களை நோக்கி சென்றார். அந்த வழியே சென்றவர் ஒருவர் அவருக்கு உதவ முயற்சித்தும் அந்த திருடர்களில் ஒருவன் தப்பி சென்றுவிட்டான் என்றார் அவர்.

கைது செய்யப்பட்ட ஆடவரின் மீது எந்த குற்றங்களும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவர் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி அமாட் டிஸாபிர் சுட்டிக் காட்டினார்.

மற்றொரு நபரைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 03-2052 9999 என்ற எண்ணுக்குத் தொடர்புக் கொண்டு அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS