'காலை தொழுகையின் போது உதவி கோரி கூக்குரல் கேட்டது'- கிராம மக்கள் கண்ணீர்! (VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், செப்.14- "காலையில் தொழுகை செய்ய எழுந்தபோது உதவி கேட்டு அலறும் சத்தம் கேட்டது. சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தேடி போகும்போது சமயப் பள்ளி கோரத் தீயில் அழிந்தது கண்டு நெஞ்சம் பதபதைத்தது" என டத்தோ கிராமட் கிராம மக்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். 

     ### காணொளி: நன்றி TheMalaysian Times

இன்று அதிகாலை 5.40 மணியளவில் கம்போங் டத்தோ கிராமட்டில் சமயப் பள்ளி ஒன்று தீயில் அழிந்தது. அதில் மாணவர்களும் ஆசிரியர்களும் என 25 பேர் பரிதாபமாக மாண்டனர். 

காலையில் தொழுகைக்காக கிராம மக்கள் எழுந்த போது அலறல் சத்தமும் உதவி கேட்டு அழும் சத்தமும் கேட்டதாக மக்கள் கூறினர். சத்தம் வரும் திசை நோக்கி சென்றபோது மூன்று மாடிகள் கொண்ட பள்ளியின் மேல் மாடி கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது என அவர்கள் கூறினர். 

தீயின் வேகத்தினால் தங்களால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்த போதும் அவர்களால் உள்ளே சிக்கி இருந்தவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என கண்ணீருடன் அங்கிருந்தவர்கள் கூறினர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS