தீ விபத்து அபாயங்களில் சமயப்பள்ளிகள்!  தீயணைப்பு துறை எச்சரிக்கை

சமூகம்
Typography

கோலாலம்பூர், செப்.14 – பதிவு செய்யப்படாத சமயப் பள்ளிகள் மற்றும் தனியார் தஃபிஷ் சமயப் பள்ளிகள் ஆகியவற்றின் பாதுகாப்பு நிலவரம் கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது.நாடு தழுவிய அளவில் இத்தகைய பள்ளிகளில் அடிக்கடி தீ அசம்பாவிதங்கள் நடந்திருப்பது இப்போது வெளியாகி இருக்கிறது.

கோலாலம்பூர் ஜாலான் டத்தோ கிராமட் சமயப் பள்ளியில் 25 பேரை பலி கொண்ட தீ விபத்துத் துயரத்தின் விளைவாக, இது போன்ற பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கும் சமயப் பள்ளிகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படைப் பிரிவினர் மிகுந்த கவலையும் அச்சமும் அடைந்துள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில் கெடா, பாலிங்கிலுள்ள தஃபிஷ் அல் தக்வா என்ற சமயப் பள்ளியில் நிகழ்ந்த அதிகாலை தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக 16 பேர் உயிர் தப்பினர். 

அதே போன்று கடந்த மே மாதத்தில் சபாக் பெர்ணத்திலுள்ள ஒரு சமயப் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் அப்பள்ளி முற்றாக அழிந்தது. எனினும், இதில் யாரும் காயமடையவில்லை. 

கடந்த 1989ஆம் ஆண்டில் செப்டம்பர் 29-ஆம் தேதி கெடாவிலுள்ள கம்போங் பாடாங் லூமாட் என்ற இடத்தில் கடந்த சமயப் பள்ளி தீ விபத்தில் 27 பேர் மாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு தழுவிய அளவில் 519 தஃபிஷ் சமயப் பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல பள்ளிகள் பதிவு செய்யப்படாமலேயே இருக்கின்றன. 

BLOG COMMENTS POWERED BY DISQUS