எம்ஆர்டி தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் வேலைக்கு தாமதம்!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஆக.22- இன்று சுங்கை பூலோ- காஜாங் செல்லும் எம்ஆர்டி ரயில் சேவையில் திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் வேலைக்குச் செல்பவர்களின் பயணங்கள் தாமதமடைந்தன.

வாடிக்கையாக எம்ஆர்டி ரயிலில் வேலைக்குச் செல்லும் எம்.சுராஜ், தான் பயணித்த ரயில் ஒவ்வொரு நிலையத்திலும் குறைந்தது 5-இருந்து 10 நிமிடங்கள் வழக்கத்திற்கு மாறாக நின்று நின்று சென்றதாக கூறினார். இதனால் அரை மணி நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டிய தாம் சுமார் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக சென்றதாகக் கூறினார்.

இன்னும் சில பயணிகள் சமூக வலைத்தளத்தில் தங்களின் அதிருப்திகளைப் பதிவு செய்தனர். அதில் ஒருவர், 'ஏன் இன்று ரயில் சேவையில் தாமதம்? எங்களுக்கு விளக்கம் கொடுங்கள்' என்று பதிவேற்றியிருந்தார்.

இதனிடையே, பண்டார் டாமான்சாரா நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறினால் தான் எம்ஆர்டி சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரேபிட் கேஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS