ஐ.எஸ்.ஏ. சட்டத்தை விட 'பொகா' சட்டம் மோசமானதல்ல! -டத்தோ ஜஸ்லான்

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஆக.22- குற்றத் தடுப்பு சட்டமான 'பொகா' (POCA)  சட்டமும்  ஐ.எஸ்.ஏ (ISA), எனப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டமும் ஒரே மாதிரியான சர்வதிகார சட்டம் என்றும் இவை இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை எனும்  குற்றச்சாட்டை உள்துறை துணையமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் குறிப்பிட்டார்.

ஐ.எஸ்.ஏ. சட்டத்துடன் ஒப்பிடும் போது பொகா சட்டம் கைதிகளின் உரிமைகளுக்கு அதிக பாதுகாப்பு தருவதாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.

கடந்த காலங்களில் ஐ.எஸ்.ஏ சட்டம் அமலில் இருந்த போது அந்தச் சட்டத்தில் அமைச்சருக்கு அதிக அதிகாரம் இருந்தது. அமைச்சர் கையெழுத்திட்டால் ஒருவரை 60 நாட்களுக்குக் காவலில் வைக்க முடியும். மேலும், தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடும் அதிகாரமும் அமைச்சருக்கு இருந்தது என்று ஜஸ்லான் கூறினார்.

ஆனால், பொகா சட்டத்தின் கீழ் கைதிகளைக் காவலில் வைக்க அதிகாரிகள் இரண்டு முறை விண்ணப்பிக்க வேண்டும். அதாவது, ஒருவர் காவலில் வைக்கப்படும் போது 21ஆவது நாளிலும், 38ஆவது நாளிலும் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதிகாரிகளுக்கு உண்டு என்று நூர் ஜஸ்லான்  கூறினார்.

2012ஆம் ஆண்டின் குற்றத்தடுப்பு சட்டத் (திருத்தம்) மசோதா மீதான விவாதத்தை நாடாளுமன்றத்தில் முடித்து வைத்துப் பேசிய போது அவர் இவ்வாறு சொன்னார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS