ஆக.25, 26, 27 தேதிகளில் உலகத் தமிழ் இணைய மாநாடு

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஆக.22- மலேசியாவைத் தலைமையகமாக கொண்ட தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வியியல் தொழில்நுட்பப் பிரிவின் ஏற்பாட்டில் உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் 25ஆம் தேதி, 26ஆம் தேதி, 27ஆம் தேதி சுல்தான் இட்ரீஸ் ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. 

இம்மாநாட்டில் தமிழ்நாடு, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை, கனடா போன்ற நாடுகளிலிருந்து பேராளர்களும் கட்டுரைப் படைப்பாளர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். கட்டுரைப் படைப்பு மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும் தளமாக மட்டுமில்லாமல் உலகத் தமிழ் ஆய்வாளர்களை இணைக்கும் தளமாக இம்மாநாடு அமையவுள்ளது.

தமிழ் இணையத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இம்மாநாட்டில் தமிழ்க்கல்வி, தமிழ்த் தொழில்நுட்பம், தமிழ்க் கணிமம், தமிழ்ச்செயலிகள், தமிழ்த் தட்டச்சு, மெய்நிகர் கல்வி என்று பல பிரிவுகளில் ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. 

மாநாடு குறித்த விவரங்கள் பின்வருமாறு:

1). தொடக்க விழா 

  நாள் : 25.08.2017

 நேரம் : மாலை 2 மணி 

 இடம் : சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் 

 பல்கலைக்கழகம், தஞ்சோங் மாலிம், பேரா

2) மாநாடு நடைபெறும் நாட்கள் 25, 26 &  27.08.2017 

 நேரம் : காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 

 இடம் :  சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், 

 தஞ்சோங் மாலிம், 

3) நிறைவு விழா 

 நாள்  : 27.08.2017

 நேரம்  : மாலை 3 மணி

 இடம்  : சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், தஞ்சோங்   மாலிம், 

 மாநாட்டைப் பற்றிய மேல் விபரங்களைப் பெற ஜனார்த்தனன் வேலாயுதம் (010-9009230) தொடர்பு கொள்ளலாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS