மலேசியாவின் சுதந்திர தினம்: ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஆக.22- எதிர்வரும் 31ஆம் தேதி மலேசியா மலை நாடு தனது 60ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. அதனைத் தொடர்ந்து வருகின்ற வெள்ளிக்கிழமை (25/8/2017) அன்று நாட்டில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் தேசிய கொடி ஏற்றி சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் அதன் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் கேட்டுக் கொண்டார். 

இந்தப் சிறப்பு பூஜைக்கு சகல சுபிட்சங்களும் கொடுக்கும் வகையில் அன்றைய தினம் விக்னங்களை தீர்க்கும் விநாயகரின் சதுர்த்தியும் கொண்டாடப்படுகின்றது.  

மூவின மக்களும் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழும் இத்திருநாட்டின் அமைதியும் சுபிட்சமும் நிலைத்திருக்க வேண்டி நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களும் விநாயகர் சதுர்த்தி பூஜைகளுடன் இந்தச் சுதந்திர தினச் சிறப்புப் பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் அனைவரும் அந்த  பூஜையில் பங்கு கொள்ள வேண்டும் என்று அவர் தமது பத்திரிக்கை செய்தியில் கேட்டுக் கொண்டார்.

பல்லின சமயத்தவர்கள் வாழும் நம் நாட்டில், அனைவரும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்தால் நாடு மேலும் நலமும் வளமும் பெறும் என்று அவர் பத்திரிக்கை செய்தியில் வலியுறுத்தினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS