யூனிசெல் பல்கலைக்கழகத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை!

சமூகம்
Typography

ஷா ஆலம், ஆக.22 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இங்கு செக்‌ஷன் 7-ல் உள்ள சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் (யூனிசெல்) சோதனை நடத்தி வருகின்றனர். சீருடை அணிந்த ஆறு அதிகாரிகள் இன்று காலையில் 9.50 மணியளவில் இரு வாகனங்களில் வந்திறங்கினர்.

யூனிசெல் மற்றும் அதன் குத்தகையாளரான ஜானா நியாகா நிறுவனத்திற்கும் இடையிலான சர்ச்சைகள் தொடர்பில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி மற்றும் மந்திரி புசார் இன்கார்ப்பரட் (எம்பிஐ) மீது புகார் செய்யப்பட்டதை அடுத்து ஊழல் தடுப்பு ஆணையம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

மேலும், ஒரே நேரத்தில் யூனிசெல்லின் நான்கு அலுவலகங்களிலும் எம்பிஐ மற்றும் ஜானா நியாகா அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, யூனிசெல் பல்கலைக்கழகம் தன்னுடைய முந்தைய ஒப்பந்தத்தை முழுமை செய்யாமல், புதிய ஒப்பந்தத்தையும் பண இழப்பீட்டையும் வழங்கியதாக ஜானா நியாகா புகார் செய்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS