ஸ்பெயினை தகர்க்க திட்டம்; 120 எரிவாயு கலன்கள் மீட்பு!

சமூகம்
Typography

மாட்ரிட், ஆக.21- ஸ்பெயினில் வாகனங்களால் பொதுமக்களை மோதித் படுகொலை பயங்கரவாதத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் கும்பல் 120 சமையல் எரிவாயு கொள்கலன்களை வாங்கி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாகனப் பயங்கரவாதத் தாக்குதல்களின் போது இந்த எரிவாயு கொள்கலன்களைப் பயன்படுத்தி வெடிப்பை ஏற்படுத்தி, பயங்கரச் சேதத்தை ஏற்படுத்த இந்தப் பயங்கரவாதக் கும்பல் திட்டமிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பார்சிலோனாவை ஒட்டியுள்ள லாஸ் ரம்பிளாஸ் என்ற இடத்தில் வேனில் மக்கள் மீது மோதி பலரைக் கொன்ற சம்பவமும், அதன் பின்னர், கேம்பிரில்ஸ் என்ற நகரில் மற்றொரு வாகனத் தாக்குதல் மூலம் 13 பேரைக் கொன்ற சம்பவமும் ஸ்பெயினை மட்டுமின்றி ஐரோப்பாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அடுத்து இந்தக் கும்பல் அல்கனார் நகரிலும் இத்தகைய தாக்குதலை நடத்தவும் அந்தத் தாக்குதலின் போது இந்த எரிவாயு கொள்கலன்களை வெடிக்கச் செய்யவும் திட்டமிட்டிருந்தது.  

மொத்தம் 12 பேர் கொண்ட இந்தக் கும்பலில், ரம்பிளாஸ் நகரில் தாக்குதல் நடத்திய வேன் ஓட்டுனர் இன்னமும் தலைமறைவாக இருந்து வருகிறார். 2-ஆவது தாக்குதல் கேம்பிரில்சில் நடந்தபோது, ஐந்து தீவிரவாதிகளைப் போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற போதிலும் அவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடந்த 6 மாதங்களாகவே ஸ்பெயின் நகரங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த இந்தக் கும்பல் திட்டம் தீட்டி வந்ததாக தெரிய வந்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS