கே.எல்.சி.சி பகுதியில் போலீஸ் அதிரடி வேட்டை!

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஆக.13- கோலாலம்பூரில் சீ கேம்ஸ் விளையாட்டுப் போட்டி அடுத்த வாரம் தொடங்கவிருப்பதை முன்னிட்டு தலைநகரின் மையப்பகுதியான கே.எல்.சி.சி வட்டாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கையில் 249 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்றிரவு இங்கு சில பதின்ம வயதினர் அமளியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவர்களால் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் மிரட்டலாக நிலவுவதாக கிடைத்த தகவலை அடுத்து களத்தில் இறங்கிய போலீஸ் படை, அதிரடி வேட்டையை நடத்தியது.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நடந்த இந்த நடவடிக்கையில் 249 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 10 வயதுக்கும் 17 வயதுக்கும் உட்பட்ட சிறார்களும் அடங்குவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

கத்தி உள்பட பல ஆயுதங்கள் இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டதோடு பதின்ம வயதினரிடமிருந்து போதைபொருள்களும் மீட்கப்பட்டது. சீ கேம்ஸ் போட்டி தொடங்குவதை முன்னிட்டு கோலாலம்பூரின் சுற்று வட்டாரத்தில் அமைதியான சூழல் நிலவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவே தாங்கள் இத்தகைய சோதனை நடவடிக்கைகளில் இறங்கி வருவதாக டான் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் முகம்மட் சுக்ரி கமான் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS