நாளை ஜொகூர் இளவரசி திருமண வைபவம்!

சமூகம்
Typography

ஜொகூர்பாரு, ஆக.13- ஜொகூர் சுல்தானின் புதல்வி இளவரசி துங்கு துன் அமினா மய்முனா இஷ்கந்தாரியா, நாளை நடைபெறவிருக்கும் திருமண வைபவத்தின் மூலம் குடும்ப வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறார்.

ஹாலந்தில் பிறந்தவரான டெனிஸ் முகம்மட் அப்துல்லாவை அவர் மணக்கவிருக்கிறார். நாளை நடைபெறும் திருமண வைபவத்திற்குப் பின்னர், இளவரசி துன் அமினா மய்முனா தனிக் குடித்தனத்தை  தொடங்கவுள்ளார்.

"நாங்கள் எங்களின் சொந்த வீட்டில் குடியேறவுள்ளோம். கணவன்- மனைவியாக நாங்கள் எங்களின் புதிய வாழ்க்கையைத் தொடங்கவிருக்கிறோம். என் பெற்றோரையும் குடும்பத்தினரையும் பிரிந்து முதன் முறையாக நான் தனித்து வாழப்போகிறேன் என்று இளவரசி துன் அமினா மைமுனா கூறினார். 

மிதமான அளவில் நடத்தப்படவிருக்கும் நாளைய திருமண வைபவத்தில் 1,200 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வர். பொது மக்கள் திருமணத்தைக் கண்டு களிக்க ஜொகூர்பாரு மாநகராட்சி கட்டடத்திலும், டத்தாரான் பண்டாராயாவிலும் மிகப் பெரிய தொலைக்காட்சிகள் வைக்கப்பட்டு ஒளிபரப்பபடும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS