குணமடைந்தாலும் டெங்கிக் கிருமிகள்  உடலில் பதுங்கி இருக்கும்! அதிர்ச்சி தகவல்

சமூகம்
Typography

 கோலாலம்பூர். ஆக.13- டெங்கிக் காய்ச்சலுக்கு இலக்கானவர்கள் அதிலிருந்து குணமடைந்து விட்ட போதிலும், டெங்கிக் கிருமிகள் தொடர்ந்து அவர்களின் உடலிலேயே பதுங்கி இருக்கும் என்ற அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார் ஒரு விஞ்ஞானி. 

அண்மையில் தானமாக பெறப்பட்ட இரண்டு சிறுநீரகங்கள் இருவேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்ட போது சிறுநீரகங்களைப் பெற்ற இருவருமே டெங்கிக் காய்ச்சலுக்கு இலக்கானதை வைத்து இது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரபல டெங்கி நிபுணரான தைவானைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஆஸ்கார் பெர்ங் சுயென் கூறினார்.

விபத்தில் இறந்து விட்ட ஒருவரிடமிருந்து இந்தச் சிறுநீரகங்கள் தானாக பெறப்பட்டன. இறந்து விட்ட அவர் 2015 ஆம் ஆண்டு, 2016 ஆம் ஆண்டில் டெங்கியால் பாதிக்கப்பட்டவர் என்றார் பேராசிரியர் ஆஸ்கார்.

டெங்கியில் இருந்து குணமடைந்தாலும் அவர்களின் இரத்தத்தில் கண்டுபிடிக்க முடியாத வகையில்  டெங்கிக் கிருமிகள் பதுங்கிக் கொண்டிருக்கின்றன என்று இதிலிருந்து தெரிய வந்திருப்பதாக அவர் சொன்னார். 

இரத்தத்தில் அந்தக் கிருமிகள் இருப்பதை கண்டுபிக்க முடியவில்லை என்றால், அந்தக் கிருமிகள் வேறு எங்கே பதுங்கி இருக்கக்கூடும் என்று கேட்கப்பட்ட போது இந்தக் கேள்விக்குத் தான் விஞ்ஞானிகள் விடை தேடி கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS