விபத்தில் தீப்பற்றிய கார் தம்பதியர் தீக்காயங்களுடன் தப்பினர்.

சமூகம்
Typography

தாப்பா, ஆக.13- வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் தாப்பாவுக்கு அருகில் வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி தீப்பற்றியதில், வாகனமோட்டியும் அவரது மனைவியும் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகினர். எனினும் இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களின் இரண்டு குழந்தைகள் காயமின்றி உயிர்தப்பினர்.

புரோட்டோன் எக்ஸோரா தனது கட்டுபாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றியது என்று தாப்பா ஓசிபிடி சோம்சாக் டின் தெரிவித்தார்.

இந்த விபத்தில் ஊய் சீ வாங் என்று 35 வயதுடைய கார் ஓட்டுனரும் அவளுடைய இந்தோனேசிய மனைவியும் காயமடைந்தனர். இவர்கள் ஈப்போ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களின் 4 வயது குழந்தையான லைனெட் மற்றும் 2 வயது குழந்தையான லோரைனும் இச்சம்பவத்தில் காயமடையவில்லை. 

BLOG COMMENTS POWERED BY DISQUS