பிரபல ஆங்கில செய்தியாளர் ஒய்.பி.சிவம் மாரடைப்பால் காலமானார்!

சமூகம்
Typography

 கோலாலம்பூர், ஆக. மலேசிய இந்தியர்களின் விளையாட்டுத்துறைக்கு அளப்பரிய பங்கினை ஆற்றிவந்த ஸ்டார் ஆங்கில நாளிதழின் முன்னாள் செய்தியாளர் ஒய்.பி. சிவம் (வயது 63) காலமானார்.

விளையாட்டுச் செய்தி துறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றியுள்ள அவர் இன்று காலையில் காலையில் மாரடைப்பினால் உயிர்நீத்தார். வருக்கு தாமரைச் செல்வி என்ற மனைவியும் யோகேஸ்வரன், புஸ்பாதேவி, திவ்யாதேவி என்ற மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

சமுதாய விளையாட்டாளர்களை பற்றியும், அவர்களின் திறமையை சமுதாய பெருமக்கள் அறியும் வண்ணமும் பல ஆண்டுகாலமாக  இவர் ஸ்டார் நாளிதழில் செய்திகளை எழுதி வந்தார். 

பல இளம் விளையாட்டாளர்களுக்கு  தனது எழுத்துக்களால் அங்கீகாரம் கொடுத்து புகழைத் தேடித்தந்தவர். அது மட்டுமின்றி விளையாட்டுத் துறை சார்ந்த நுணுக்கங்களையும், ஸ்குவாஷ், பேட்மிண்டன், கால்பந்து, கபடி, ஹாக்கி உள்ளிட்ட பல விளையாட்டுக்களில் நிபுணத்துவம் பெற்றவர்.

இதனிடையே ஒய்.பி சிவம் அவர்களின் மறைவு மலேசிய இந்திய சமுதாய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு என மிஃபாவின் தலைவரும், மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் தலைவருமான டத்தோ டி.மோகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

இந்திய சமுதாய விளையாட்டுத்துறைக்காக எதிர்பார்ப்புகள் கடந்து உழைத்தவரும், சுக்கிம் (மலேசிய இந்தியர் விளையாட்டுப்போட்டிகள்) உருவாக காரணமானவர்களில் ஒருவராகவும் இருந்தவர் என்று தமது இரங்கல் செய்தியில் டி.மோகன் குறிப்பிட்டார்.  

என்னோடு சிலாங்கூர் மாநில கபடி சங்கத்தில் செயலாளராக துடிப்போடும், நேர்மையோடும் பணியாற்றியவர்.  இந்திய சமுதாய விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்தை மட்டுமே மனதில் வைத்து பணியாற்றிய நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம் என அவர் குறிப்பிட்டார்.  

மறைந்த சிவம் அவர்களின் இறுதிச்சடங்குகள் நாளை 13/08/2017 ஞாயிற்றுக்கிழமை NO: 5 JALAN BPP ¼ TAMAN PUTRA PERMAI SERI KEMBANGAN 43300, SELANGOR எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று 2.30 மணியளவில் இவரது நல்லுடல் பூச்சோங் 14ஆவது மைல் இடுகாட்டில் தகனம் செய்யப்படவிருக்கிறது. 

மேலும் தொடர்புக்கு யோகேஷ் 0176856893, பு‌ஷ்பா 0123178564

BLOG COMMENTS POWERED BY DISQUS