பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினருக்கு ஐந்து நாள் தடுப்புக் காவல்!

சமூகம்
Typography

ஜார்ஜ்டவுன், ஆக.12- பினாங்கு மாநிலத்தின் சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போ மற்றும் இருவர், இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களை அடுத்த ஐந்து நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க  நீதிமன்றம் அனுமதி அளித்தது. 
புக்கிட் மெர்டாஜாம் சுங்கை லெம்புவிலுள்ள சட்டவிரோத கார்பன் தொழிற்சாலை தொடர்பான விசாரணையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். 

இதனிடையே அவருடன் சேர்த்து அந்த கார்பன் தொழிற்சாலையின் நிர்வாகியான 70 வயது ஆடவரும் தொழிற்சாலையின் இயக்குனரும்  ஆட்சிக் குழு உறுப்பினர் பீ போன் போவின் மகனுமான 37 வயதுடைய நபரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.

பீ பூன் தரப்பில் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங்கும் ஆர்.எஸ்.என் ராயரும் ஆஜராகினர். இதனிடையே, அந்தத் தொழிற்சாலையின் நிர்வாகியையும் அவரின் மகனையும் பிரதிநிதித்து வழக்கறிஞர் தேவ் குமரேந்திரன் ஆஜரானார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS