25,000 லிட்டர் எரி அமிலத்துடன் கொள்கல லோரி கவிழ்ந்தது! ஓட்டுனர் பலி!

சமூகம்
Typography

 

சிரம்பான், ஆக.12- இன்று காலை செனாவாங் அருகில் உள்ள பிளஸ் நெடுஞ்சாலையின் 251 ஆவது கிலோ மீட்டரில் எரி அமிலத்தை ஏற்றிக் கொண்டு வந்துகொண்டிருந்த கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில் 30 வயதுடைய கொள்கலன் ஓட்டுனர் உயிரிழந்ததோடு இரு பெண்மணிகள் படுகாயமடைந்தனர்.

நள்ளிரவு 3 மணியளவில் பிளஸ் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த கொள்கலன் திடீரென டோயோட்டா கார் ஒன்றில் மோதி கவிழ்ந்ததில் 25 ஆயிரம் லிட்டர் எரி அமிலம் நெடுஞ்சாலையில் கொட்டியது. சம்பவ இடத்திலேயே கொள்கலன் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்ததோடு டொயோட்டா காரில் இருந்த இரு பெண்மணிகளும் படுகாயம் அடைந்தனர்.

டொயோட்டா காரில் கொண்டிருந்த அந்த இரண்டு பெண்களையும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்குரனுப்பி வைத்தனர் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு படை மூத்த அதிகாரி ஸைனூரின் தெரிவித்தார்.

இந்த விபத்தின் காரணமாக பிளஸ் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு அபாயகர இரசாயனப் பிரிவைச் சார்ந்த குழு தற்பொழுது எரி அமிலங்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS