'அபாங் புசார்' மணிகண்டன் உள்பட 11 பேருக்கு பினாங்கு போலீஸ் வலைவீச்சு!

சமூகம்
Typography

 

ஜார்ஜ் டவுன், ஆக.12- சட்டவிரோத கும்பல்களின் வட்டாரத்தில் 'டத்தோ அபோய்', 'அபாங் புசார்' என்றெல்லாம் அழைக்கப்படும் டி.மணிகண்டன், 'ரமேஸ் மசாலா' என்றழைக்கப்படும் பரமேஸ்வரன் உள்பட ஆகியோர் உள்பட 11 நபர்களை பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாக பினாங்கு போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து நடந்துள்ள குற்றச் செயல்கள் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் காரணமாக தங்களின் புலன் விசாரணைக்கு உதவ இவர்களைத் தாங்கள் தேடி வருவதாக மாநில போலீஸ் ஆணையர் டத்தோ வீரா சுவா ஹீ லாய் தெரிவித்தார்.

தேடப்படுவர்களின் விபரம் வருமாறு;

1) டி. மணிகண்டன் என்ற டத்தோ அபோய் (வயது 37)

2) ஜி. மேகராஜ் (வயது 21) 

3) எஸ். பாரதிராஜ் (வயது 23)

4) ஏ. கேப்ரியல் ஸ்டேன்லி (வயது 247)

5) ஓ. கிரிதரன் (வயது 25)

6) ஆர். நவின்ராஜ் (வயது 25)

7) எஸ். மார்ட்டின் (வயது 26)

8) என். தேவன் என்ற தீபன்  (வயது 28)

9) சி. குமாரதாஸ் (வயது 28)

10) எம். ரிஷிகரன் என்ற ரிஷி (வயது 29)

11) எம். பரமேஸ்வரன் என்ற ரமேஸ் மசாலா (வயது 41)

போலீசாரால் தேடப்படும் இவர்கள் அனைவருமே பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்களில் சிலர் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டனர் என்று போலீஸ் ஆணையர் சுவா ஹீ லாய் குறிப்பிட்டார்.

இவர்களில் பெரும்பாலோர் தங்களின் உடலில் 'சுவாஸ்திகா' சின்னத்தைப் பச்சைக் குத்திக் கொண்டிருப்பர் என்று இங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் சொன்னார். 

இவர்களைப் பற்றித் தகவல் தெரிந்தால் அண்டையிலுள்ள போலீஸ் நிலையத்திடம் தொடர்பு கொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதேவேளையில் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதிக்கிடையே பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 'கேங்க் 04-'ஐ சேர்ந்த 24 பேர் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 20 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.

'சொஸ்மா' எனப்படும் பாதுகாப்புச் சட்ட (சிறப்பு நடவடிக்கை) 4ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் 28 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளனர் என்று போலீஸ் ஆணையர் சுவா சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS