சங்கங்கள் பதிவகத்திடமிருந்து ஜசெகவுக்கு கிடைத்தது கடிதம்!

சமூகம்
Typography

 பெட்டாலிங் ஜெயா, ஜூலை.17- ஜசெகவின் மத்திய நிர்வாகக் குழு தேர்தலை மறுபடியும் நடத்த சங்கங்கள் பதிவு இலாகா அதிகாரப்பூர்வ கடிதத்தை அக்கட்சிக்கு அனுப்பி விட்டது. 

இன்று காலையில் அந்த அதிகாரப்பூர்வக் கடிதம் தமக்கு கிடைத்ததாக ஜசெகவின் தேசிய சட்டப்பிரிவு தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

வருகின்ற புதன்கிழமை கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் சந்தித்து கலந்தாலோசித்து தங்களது முடிவை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவர் என அவர் கூறினார்.

இதற்கு முன்னர், ஜசெக கட்சி மறுபடியும் தனது மத்திய நிர்வாக குழு தேர்தலை நடத்த வேண்டும் என சங்கங்கள் பதிவு இலாகா ஆணை பிறப்பித்திருந்த வேளையில், அதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தை கொடுக்காமல் இருப்பதை கோபிந்த் சிங் சுட்டிக் காட்டி இருந்தார். மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் சங்கப் பதிவு இலாகா அதிகாரப்பூர்வக் கடிதத்தை வழங்க அவர் கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS