மெர்டேக்கா தினம் வரை: எம்.ஆர்.டி., எல்.ஆர்.டி., மொனோரயில் 50% கட்டணச் சலுகை! -பிரதமர்

சமூகம்
Typography

 

கோலாலம்பூர், ஜூலை.17- கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி. மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு எம்.ஆர்.டி., எல்.ஆர்.டி மற்றும் மொனோரயில் சேவைகளில் 50 விழுக்காடு கட்டணச் சலுகை மக்களுக்கு வழங்கப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இன்று அறிவித்தார். இச்சேவை நாளை தொடங்கி ஆகஸ்டு 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும். 

இன்று சுங்கை பூலோ-காஜாங் வழி செல்லும் MRT விரைவு ரயில் சேவையை துவக்கி வைத்தப் பின் அவர் செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார். சுங்கை பூலோ-காஜாங் வழி செல்லும் MRT விரைவு ரயில் சேவையை கிள்ளான் பள்ளதாக்கு குடியிருப்பாளர்கள் இன்று மாலை 4 மணி தொடங்கி நள்ளிரவு 12 வரை இலவசமாக அனுபவிக்கலாம்.

சுங்கை பூலோ-காஜாங் வழி 51 கிலோமீட்டர் செல்லும் MRT விரைவு ரயில் சேவை பொது விடுமுறை நாட்களிலும் அமலில் இருக்கும். இதில் 19 புதிய நிலையங்கள் உள்பட மொத்தம் 31 நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS