கோர விபத்து: தம்பதி பலி! 10 பேர் காயம்!

சமூகம்
Typography

கோத்தா திங்கி, ஜூலை.17– கோத்தா திங்கியிலிருந்து சுமார் 59 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஜாலான் சுங்கை ரெங்கிட்டில் ஐந்து வாகனங்கள் விபத்துக்கு உள்ளானதில் ஒரு தம்பதியினர் மாண்டனர். மேலும், 10பேர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று இரவு 9.45 மணியளவில் லுமூட்டிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு கார் ஓட்டுனர், தனது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என கோத்தா திங்கி ஓசிபிடி அஸ்மோன் பாஜா கூறினார். 

மேலும், அந்த கார் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்புறச் சாலைக்குள் நுழைந்த போது எதிரே வந்த 4 கார்களுடன் அந்தக் காரை மோதி விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தின் போது காரில் பயணம் செய்த பெல்டா பெங்கெலி திமூரைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்தனர். அதே வேளையில் மற்ற 10 பேரும் சிறுகாயங்களுடன் தப்பினார்கள் என ஓசிபிடி அஸ்மோன் பாஜா கூறினார். 

பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். கவனக் குறைவாக வாகனத்தை ஓட்டிய குற்றத்திற்காக சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1) இன் கீழ் இந்தச் சாலை விபத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS