புஜுட் தொகுதியில் ஜூலை 4இல் இடைத் தேர்தல்!

அரசியல்
Typography

புத்ராஜெயா, மே.19- சரவா சட்டமன்றத்தின் புஜுட் தொகுதியின்  இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணை அறிவித்துள்ளது. 

இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 20-ஆம் தேதி இடம்பெறும் என்றும் தேர்தல் ஆணை இயக்குனர் டத்தோஶ்ரீ முகமது ஹஷிம் அப்துல்லா இன்று அறிவித்தார். 

சரவா சட்டமன்றத்தின் புஜுட் தொகுதி உறுப்பினரான டாக்டர் திங் தியோங் சூன், ஒரே சமயத்தில் இரு நாடுகளின் குடியுரிமையை வைத்திருந்ததாக சட்டமன்றத்திலிருந்து அவரை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது

அவருக்கு எதிராக தேசிய முன்னணியைச் சேர்ந்த 70 சட்டமன்ற உறுப்பினர்கள் வாகளித்ட்னர் அவர நீக்குவதற்கு எதிராக 10 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். 

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் டாக்டர் திங் 1,759 வாக்குகள் வித்தியாசத்தில் புஜூட் தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS