பழனி தரப்பினருக்கு 3 நாடாளுமன்றம், 6 சட்டமன்ற தொகுதி வேண்டும்: ராமலிங்கம் (VIDEO)

அரசியல்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல் 21- பொதுத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஆருடம் கூறப்பட்டு வரும் இவ்வேளையில், மஇகா உட்பூசல் காரணங்களால் இரண்டு பிரிவுகளாக பிரிந்திருப்பதை நிறுத்திக் கொண்டு, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது மீதான மகஜரை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்ததாக டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் அணியைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான டத்தோ கே. ராமலிங்கம் கூறினார்.

கேமரன் மலை, தெலுக் கெமாங், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதிகளிலும், ஈஜோக், காஹாங், புக்கிட் செலாம்பாவ், பாகான் டாலாம், ஊத்தான் மெலிந்தாங், காடேக் சட்டமன்ற தொகுதிகளிலும் பழனிவேல் அணியைச் சேர்ந்தவர்கள் மஇகாவைப் பிரதிநிதித்து வரும் 14ஆம் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அந்த மகஜரில் கோரிக்கை விடுத்ததாக ராமலிங்கம் கூறினார்.

பழனிவேல் அணியைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் மஇகாவுக்கு பலம் சேர்ப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார். இந்திய மக்கள் தேசிய முன்னனிக்கு வாக்களிக்க வேண்டும் என்றால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் ஆதவாளர்கள் தேசிய முன்னனிக்கு அளித்த மகஜரை விளக்குவதற்காக ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தில் ராமலிங்கம் பேசியபோது இதனைக் கூறினார்.

இதனிடையே இருதரப்புக்கு இடையே இணக்கப்போக்கு ஏற்படுவதற்கு முயற்சிகளைத் தாங்கள் முன்வைத்த போதிலும், மஇகா தலைமைத்துவம் தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் இருந்து வரும் வழக்கை தாங்கள் வாப்பஸ் பெறுவதைப் பற்றி தாங்கள் இன்னும் அந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS