விரைவில் பொதுத்தேர்தல் வருகிறது! தேர்தல் ஆணையம் முன் அறிகுறி!

அரசியல்
Typography

கோலாலம்பூர், பிப்.17- மலேசியாவில் பொதுத்தேர்தல் விரைவில் நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறி தென்படத் தொடங்கி விட்டது. தேர்தல் ஆணையம் இதற்கான அறிகுறியை மறைமுகமாகக் காட்டி இருக்கிறது.

நேற்று இரண்டு குத்தகைகளுக்கான டெண்டர்களை தேர்தல் ஆணையம் விளம்பரமாக வெளியிட்டுள்ளது. பொதுத் தேர்தலுக்குப் பயன்படும் வகையிலான இரண்டு வகைப் பைகளைத் தயாரிப்பதற்கான டெண்டர்களை அது வெளியிட்டிருப்பது தேர்தலுக்கான முன் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்காக ஒருவகைப்  பை தேவைப்படுவதால் அதனை வினியோகிக்கக் கூடியவர்களுக்கென ஒரு டெண்டரை அது வெளியாக்கியுள்ளது.

அடுத்து மற்றொரு வகைத் தோள் பையைப் பெறவும் ஒரு டெண்டரை வெளியாகியுள்ளது. இந்த வகைப் பை, தேர்தல் பணியாளர்களுக்கு உரியது ஆகும். 

ஆர்வம் உள்ளவர்கள் புத்ராஜெயாவிலுள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் டெண்டருக்கான பதிவைச் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS