இனவாதப் பேச்சு: அம்னோ பேராளர்கள் மீது விசாரணை இல்லையா? -டோனி புவா

அரசியல்
Typography

 கோலாலம்பூர், டிசம்.3- இனவாதமாகப் பேசும் அம்னோ பேராளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஜசெக தலைவர்களில் ஒருவரான டோனி புவா கேள்வி எழுப்பினார்.

ஆனால், சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாக்க முயலுவோரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள், நியாயமற்ற முறையில் விசாரிக்கப்படுகிறார்கள் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

கடந்த மூன்று தினங்களாக நடக்கும் அம்னோ மாநாட்டில் பேராளர்கள் சிலர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் பேசுகிறார்கள் என்று பெர்சே-5 பேரணியில் கலந்து கொண்டது தொடர்பில் விசாரணை எதிர்நோக்கியிருக்கும் டோனி புவா சொன்னார்.

பெர்சே-5 பேரணியில் பேசியதற்காக 2012ஆம் ஆண்டின் அமைதி ஒன்றுகூடல் சட்டத்தின் 4(2)(பி) பிரிவின் கீழ் புக்கிட் அமானில் நடந்த போலீஸ் விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி.யுமான அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மலேசியாவில் அதிகாரத் துஷ்பிரயோகம் நடப்பது தெளிவாக தெரிகிறது. போலீஸ் தனது பணிகளை நியாயமாகச் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS