எதிர்க்கட்சிகளின் செயலால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு! -கேவியஸ்

அரசியல்
Typography

கோலாலம்பூர், செப்.25- மலேசியாவின் பொருளாதாரம் மந்தநிலையை அடைவதற்கு எதிர்க்கட்சியினர் மற்றும் நாட்டின் முன்னாள் தலைவர்கள் ஆகியோர் வெளிப்படையாக நாட்டின் பெயரைக் கெடுக்கும் வகையில் பேசி வருவது தான் காரணம் என்று மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் குற்றஞ்சாட்டினார்.

நாட்டைப் பழித்துரைக்கும் வகையில் இந்தத் தலைவர்கள் பேசிவருவதால், நாட்டை மேம்படுத்த பாரிசான் அரசாங்கம் மேற்கொ ண்டு வரும் முயற்சிகள் பிரச்சனைக்கு உள்ளாகின்றன என்றார் அவர்.

இதன் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு துரிதமாக வளர வேண்டுமோ, அந்த அளவுக்கு வளராத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் தான் பாதிப்படைகின்றனர் என்று கேவியஸ் சொன்னார்.

இங்கு புத்ரா வணிக மையத்தில் நடந்த மைபிபிபி கட்சியின் அவசர பொதுப் பேரவைக் கூட்டத்தில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மைபிபிபி கட்சியின் புதிய பிராந்தியங்களாக சபா மற்றும் சரவாவை சேர்க்க, கட்சியின் அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யும் விவகாரம் உள்பட பல அம்சங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நாட்டை நேசிக்காதவர்களின் குறை கூறல்களைப் பற்றி தேசிய முன்னணி கவலை கொள்ளத் தேவையில்லை. இன்றைக்கு நாட்டைக் குறை கூறுபவர்கள், முன்பு அதன் மூலம் பெரும் பலன் அடைந்தவர்கள் தான். பழைய விரோதிகளோடு திடீரெனக் கைகுலுக்கி,  நணபர்களாகிக் கொள்ளும் தலைவர்களின் செயலில் மயங்கிவிடவேண்டாம் என்று ஆதரவாளர்களை கேவியஸ் கேட்டுக் கொண்டார். 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS