ராஜபக்சேவை மனிதனாகக் கூட நாங்கள் ஏற்கமாட்டோம்- சிவராஜ் (VIDEO)

அரசியல்
Typography

கோலாலம்பூர், செப். 2- போர்க் குற்றவாளி மகிந்தா ராஜபக்சேவை நாங்கள் மனிதனாகக் கூட எற்றுக் கொள்ளாத நிலையில் மலேசிய அரசாங்கம் ஏன் அவரை நாட்டிற்குள் விடுகிறது என்று மஇகாவின் இளைஞர் பகுதி தலைவர் ச.சிவராஜ் இன்று நடந்த கண்டன பேரணியில் கேட்டார். ராஜபக்சேவை மலேசிய அரசாங்கம் அழைத்திருப்பது தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என அவர் கூறினார்.

 

ஆசியான் அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டிற்காக மகிந்தா ராஜபக்சே மலேசிய வருகை கண்டித்து நேற்றும் இன்றும் கண்டன ஆர்ப்பார்ட்டங்கள் நடந்து வருகிறது. இன்று காலை 8 மணியளவில் மஇகா தலைமையகத்திலிருந்து புத்ரா உலக வாணிப மையத்திற்கு சென்ற மஇகா இளைஞர் பகுதி, அங்கே கண்டன ஆர்ப்பாட்டத்தைச் செய்தது. 

அதில் பேசிய இளைஞர் பகுதி தலைவர் ச.சிவராஜ், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்ற கொலையாளி ராஜபக்சேவுக்கு விஐபி அங்கீகாரத்தை மலேசிய அரசாங்கம் கொடுக்கவே கூடாது என்றார். ராஜபக்சேவை நாங்கள் மனிதனாகவே மதிக்கவில்லை, பிறகு எப்படி அவருக்கு விஐபி அங்கீகாரம் வழங்குவது என சிவராஜ் கேட்டார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS