அம்னோ இளைஞர் பிரிவின் போலீஸ் புகார்: சாடினார் பாஸ் எம்பி

அரசியல்
Typography

புத்ராஜெயா, ஜுலை 27- 1எம்டிபி முறைகேடு தொடர்பான விசாரணகளில் சம்பந்தப்பட்டுள்ள முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக, போலீசில் புகார் செய்திருக்கும் அம்னோ இளைஞர் பிரிவின் செயலுக்கு பாஸ் கட்சி எம்.பி.யான மாஃபுஸ் ஒமார் கண்ட னம் தெரிவித்தார்.

1எம்டிபி விவகாரம் உலகறிந்த ஒன்றாகிவிட்ட நிலையில், இப்போது அத்தகைய போலீஸ் புகாரை அம்னோ இளைஞர் பிரிவு செய்திருப்பதானது, மிகவும் விசித்திரமாக இருக்கிறது என்று பொக்கோ சேனா தொகுதி எம்பியான மாஃபுஸ் ஒமார் சுட்டிக்காட்டி னார்.

இந்தப் பிரச்சனை உலக அளவுக்கு அம்பலமாகிக் கிடக்கிறது. ஆனால், இப்போதுதான் நம் நாட்டில் ஆளுங்கட்சியின் இளைஞர் பிரிவு போலீஸ் புகார் செய்து கொண்டிருக்கிறது என்றார் அவர்.

அம்னோ இளைஞர் பிரிவு, தனது போலீஸ் புகாரில் பெயர் குறிப்பிட்டிருப்போரில் ஒருவர் அபு காசிம். இவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் பதவியில் இன்னமும் இருக்கிறார். ஆகஸ்டு மாத்தில் தான் அவர் அப்பதவியில் இருந்து ஓய்வுபெறவிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக இப்படியொரு புகாரைச் செய்திருப்பது மரியாதை கெட்ட செயலாகும் என்று அவர் சாடினார்.

இவ்விவகாரத்தில் ஷெட்டி அக்தார், அபு காசிம், மற்றும் கனி பட்டெய்ல் ஆகியோர் மவுனமாக இருக்கக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார். எப்போதுமே மக்களின் தலைக்குள் தவறான யோசனைகளை திணிப்பது தான் அம்னோ இளைஞர் பிரிவின் செயலாக இருந்து வருகிறது.

இப்போதுள்ள சூழலில், இந்த அதிகாரிகள் அமெரிக்காவுக்கு தகவல்களை வழங்கி, நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டார்கள் என்று மக்களை நினைக்க வைக்க வேண்டுமென்பதே இவர்களின் நோக்கமாகும். இதன்வழி  உண்மைக் குற்றவாளிகளை பாது காப்பதே அம்னோ இளைஞர் பிரிவின் நோக்கம் என்று அவர் சொன்னார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS