சரவாக்கிற்குள் நுழைய கோபிந்த் சிங்கிற்குத் தடை 

அரசியல்
Typography

பெட்டாலிங் ஜெயா,  26 ஏப்ரல்-   பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர்  கோபிந்த் சிங்  டியோ  சரவாக் மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளார்.   முன்னதாக கூச்சிங்  விமான நிலையம் வந்தடைந்த அவர் மாநிலத்திற்குள் நுழையக்கூடாது என தடைவிதிக்கப்பட்டதாக கோபிந்த் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

"என்னுடைய விமானம் 9.40 மணிக்கு புறப்பட்டு  11.30 மணிக்கு கூச்சிங் வந்தடைந்தது" என  தெரிவித்த கோபிந்த் சிங் டியோ  மாநிலத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டதால்   மீண்டும் கோலாலம்பூருக்கு 2.45 மணிக்கு வந்தடைந்ததாக  அவர்  தெரிவித்தார். 

இது வரை ஜ.செ.க கட்சியைச் சேர்ந்த அந்தோணி லோக், திரேசா கொக், டோணி புவா,  தியோ நி சிங், பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த  நூருல் இஸ்ஸா அன்வார், தியான் சுவா, சம்சுல் இஸ்கண்டார், சுரைடா கமாருடின், சிம் ஸே சின்  மற்றும் முகமது சாபு ஆகியோர் சரவாக் மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS