1எம்டிபி: அனைத்துலக விசாரணைக்கு செய்செல்ஸ் தீவு உதவி!

அரசியல்
Typography

விக்டோரியா, ஏப்ரல் 24- 1எம்டிபி விவகாரம் தொடர்பில் அனைத்துலக அளவில் நடந்து வரும் விசாரணைக்கு செய்செல்ஸ் தீவு உதவி வருவதாக அந்நாட்டு நிதித் துறை உளவு அமைப்பு கூறியிருக்கிறது.

செய்செல்ஸ் தீவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பங்குகள் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் 1எம்டிபி குறித்து விசாரித்து வரும் நாடுகளுக்குத்  தரப்பட்டிருப்பதாக அது கூறியிருக்கிறது. 

அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், லக்ஸம்பர்க் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய நாடுகள் 1எம்டிபி குறித்து விசாரணை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய 1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் பலநாடுகள் விசாரணையில் இறங்கியிருக்கும் நிலையில், செய்செல்ஸும் அதில் சம்பந்தப் பட்டிருப்பது முதன் முறையாக வெளிப்பட்டிருக்கிறது. 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS