இன்று பிரதமர் வெளியிடப் போகும்  அதிரடி அறிவிப்பு என்ன? 

அரசியல்
Typography

கோலாலம்பூர், செப்.17- அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி இருக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், இன்று பிற்பகலில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றைச் செய்யவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அவர் செய்தியாளர்களுடனான சந்திப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அந்தச் சந்திப்பின் போது அனைத்து அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களும் அங்கே இருக்கவேண்டும் என்ற அழைப்பும் அனுப்பப்பட்டுள்ளது.

அம்னோ தலைமையகத்தில் நடைபெறவிருக்கும் இந்த செய்தியாளர்கள் கூட்டத்தின் போது பிரதமர் நஜிப் அறிவிக்கவிருக்கும் முக்கிய அம்சம் என்ன என்பது குறித்து எல்லா தரப்புக்களுமே மிகவும் இரகசியம் காத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒருவேளை, பொதுத்தேர்தலை நடத்துவதற்கு வழியமைக்கும் வகையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அனுமதியை பிரதமர் நாடியுள்ளார் என்ற அறிவிப்பு வரக்கூடுமோ என்ற யூகங்கள் எழுந்துள்ள நிலையில் அதனையும் அம்னோ வட்டாரம் மறுத்ததுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS