Latestமலேசியா

VIDEO – ஆள்யின்றி ஆடும் ஊஞ்சல் – திகிலூட்டும் காணொளி

அம்பாங்,  தாமான் நிர்வாணா குடியிருப்பு பகுதி அருகில் மின்சாரம் துண்டிக்கபட்டதைத் தொடர்ந்து திகிலூடும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.  கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  முகமட் நஸ்ரின் ஃபாமி அப்துல் ஜாலில் வயது 16 எனும் மாணவன் அக்குடியிருப்பு பகுதியில் உள்ள விளையாடடு மைதானத்தைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தார். அச்சமயம் மைதானத்தில் உள்ள இரண்டு ஊஞ்சல் ஆள் இல்லாமல்  தானாக ஆடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அத்திகில் சம்பவத்தை  காணொளி பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த காணொளி வைராக பரவி வருகின்றது. சுமார் 30 வினாடி கண்ட அந்த காணொளியில் இரண்டு ஊஞ்சல்களும் ஆள் இல்லாமல் சுயமாகவே ஆடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே, அச்சமயம் அவ்வளவ காற்று வேகம்  வீச வில்லை. அப்படியே, காற்று வீசினாலும், காற்றின் வேகத்திற்கு ஏற்ப அந்த ஊஞ்சல்கள் ஆடுவது போல் தோற்றம் அளிக்க வில்லை என நஸ்ரின் டூவிட்டர் பக்கத்தில் பதிவிடிருந்தார்.

மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் முதல் தடவையாக ஏற்பட்டதில்லை என்றும் இதற்கு முன்  3 முறையும் இவ்வாறு  நடந்திருப்பதை கேள்விப்பட்டுள்ளதாக  நெட்டிட்சன்கள் பலர் கருத்துகளை பதிவிட்டிருந்தனர். அதோடு, அந்த வீடடிற்கு முன் இரண்டு சிறார்கள் கடந்து செல்வதை  எதார்த்தமாக  பார்த்தாகவும் அவர்களாக கூட இருக்கலாம்  என அண்டை வீட்டார் தெரிவித்தாகவும்  நஸ்ரி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!