
கோலாலம்பூர், நவ 5- இன்று தொடங்கும் இவ்வாண்டுக்கான எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் பொது தேர்வினை எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வாழ்த்து தெரிவித்தார்.
சிறந்த புள்ளிகள் பெற்று மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென அவர் தனது முகநூல் பக்கத்தில் காணொளி வாயிலாக தெரிவித்தார். முறையான திட்டமிடலோடும் வழிகாட்டுதலோடும் தேர்வினை எதிர்க்கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்குப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அறிவுறுத்தினார்.