Latestமலேசியா

SEKAT மாநாடு நாளை நிச்சயம் நடைபெறும்

கோலாலம்பூர், டிச 28 – தமிழ்ப்  பள்ளிகளில்  ஜாவி  எழுத்து அறிமுகப்படுத்தப்படுவதை  எதிர்க்கும்    மாபெரும் மாநாடு  நாளை  டிசம்பர்  29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை   காலை 10 மணி முதல் மாலை 3மணிவரை பெட்டாலிங்  ஜெயாவில் கிறிஸ்டல் கிரவுன் தங்கும் விடுதியில் நிச்சயமாக நடைபெறவுள்ளது.

செக்காட் எனப்படும் காட் கலை நடவடிக்கை குழு  கூட்டமைப்பின்   ஏற்பாட்டில்  நடைபெறும்  மாநாட்டில்  தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி  மொழி அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் தாக்கம்  மற்றும் அதன் பிரச்சனை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் வகையில் சபா, சராவ உட்பட  பல இனங்களையும் சேர்ந்த மலேசயர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் களமாக அமையும் என செக்காட் அமைப்பின் செயலளாரான  அருண் துரைசாமியை தொடர்புக் கொண்டபோது அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

சீன கல்வி அமைப்பான டோங் ஷோங்  மற்றும்  அரசு சார்பற்ற சீன அமைப்புகள் இன்று காஜாங்கில் ஏற்பாடு செய்திருந்த   ஜாவி  அறிமுகம் தொடர்பான ஆட்சேபக் கூட்டத்தை நீதிமன்றத்தின் தடை உத்தரவின் மூலம் போலீசார் ரத்து செய்த ஒரு நாளுக்குப் பிறகு செக்காட் தலைமையிலான மாநாடு நாளை நடைபெறவிருக்கிறது.
நாளைய மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என அருண் துரைசாமி தெரிவித்தார். தாய்மொழிப்  பள்ளிகளில் ஜாவி பாடத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை   கல்வி அமைச்சு  மறுபரீசிலிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.    அடுத்த ஆண்டு முதல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான  தேசிய மொழி பாடத்தில்   ஜாவி எழுத்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஏற்கனவே  தமிழ்  மற்றும் சீனப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தாலும் கல்வி அமைச்சு தொடர்ந்து இத்திட்டத்தை அமல்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. சமுகத்தன் ஒட்டு மொத்த எதிர்ப்பை அரசாங்கத்திற்கும் கல்வி அமைச்சிற்கும்  தெரிவிக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!