Latestமலேசியா

QIU பல்கலைக்கழகத்தின் 5வது பட்டமளிப்பு விழா – 370 பேர் பட்டம் பெற்றனர்

ஈப்போ.  டிச 1 – QIU குவேஸ்ட் அனைத்துலக பல்கலைக்கழகம் அண்மையில் நடைபெற்ற தனது 5ஆவது பட்டமளிப்பு விழாவில் கல்வித் துறையில் சாதனை படைத்த  அனைத்துலக  மாணவருக்கு உரையாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கி கௌரவித்தது. இதன்மூலம் உண்மையான உலகளாவிய கல்வி நிலையம் என்ற தகுதியை இந்தப் பல்கலைக்கழகம் பிரதிபலித்தது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தகவல் தொடர்பு துறை பட்டதாரி ஷஹிப்ஷாடா முபாஷிர் சிறந்த சாதனைக்காக  டத்தோஸ்ரீ  டாக்டர் விஜய் ஈஸ்வரனின் விருதை பெற்றார்.அன்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற  குவேஸ்ட் அனைத்துலக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் இந்த விருதை பெற்றார்.

பல்கலைக்கழகத்திற்கு அப்பால் தாம் கலந்துகொண்ட பல்வேறு நடவடிக்கைகளிலும் சிறந்த முத்திரையை பதித்ததன் மூலம் 37 வயதுடைய  ஷஹிப்ஷாடா முபாஷிர் இந்த விருதைப் பெற்றார்.

 

இவ்வாண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 370 பேரில் தமது நண்பர்களால் மோபி என அழைக்கப்படும் ஷஹிப்ஷாடாவும் ஒருவராவார். பல்கலைக்கழக மன்றத்தின் தலைவர் டத்தோஸ்ரீ  விஜய் ஈஸ்வரன் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கினார்.

முதல் நிலை ஹானஸ் பட்டம் பெற்ற அந்த சிறந்த மாணவர் QIU அனைத்துலக பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்து பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் தேசிய ஆங்கில ஒலிம்பிக் போட்டியில் (NEO 17) அவர் தங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அதோடு பல்கலைக்கழகத்தின் சொற்போர் குழுவிலும் முக்கிய உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார். உலக பல்கலைக்கழக அமைதி அழைப்பு சொற்போர் போட்டியில் (WUPID) QIU பல்கலைக்கழக குழு முதல் 16 முன்னணி குழுக்களில் ஒரு  இடத்தை பெற்றது.

தங்களது துறைகளில் உடனடியாக ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை காணக்கூடிய பட்டதாரிகளை உருவாக்குவதில் Q.I.U பல்கலைக்கழகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இதனை மோபி சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார். அனைத்துலக மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் மற்றும் சஞ்சிகைகளில் 250க்கும் மேற்பட்ட அவரது படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன.

இனம் ,மொழி, நாடு  என்ற வேறுபாடு இன்றி கல்வி  ஆற்றலில் ஒருவர் பிரகாசிக்க முடியும். எவரும் பின் தங்கி விடாமல் நாம் அனைவரும் ஒரு பல்கலைக்கழகமாக இருப்பது குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என Q.I.U பல்கலைக் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி நிக்லஸ் கோ கூறினார்.

நமது மாற்றுத் திறனாளி மாணவர்களும் மேலும் கல்வியாளர்கள், பராமரிப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும்  பொதுமக்களின்  சிறப்பு தேவைக்கான கல்விப் பயிற்சியை வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான பேரா சங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று நிக்கல்ஸ் கோ தெரிவித்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் ,மருந்தியல் , வர்த்தகம்,நிர்வாகம் ,சமூக அறிவியல், அறிவியல் தொழில்நுட்ப துறை ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

டத்தோஸ்ரீ டாக்டர் விஜய் ஈஸ்வரன், பல்கலைக்கழக மன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ   மெகாட் நஜ்முடின் டத்தோஸ்ரீ மெகாட் ஹாஸ் மற்றும் டான்ஸ்ரீ எஸ். வீரசிங்கம் ஆகியோரும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

Q.I.U கியூ.ஐ.யூ  பல்கலைக்கழக மன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் பணியாளர்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 1,200 க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!