Latestமலேசியா

MACC தடுப்புக்காவலில் போலிஸ்காரர்கள் தாக்கப்பட்ட புகார்; விசாரிக்கப்படும் – லத்திபா கோயா

கோலாலம்பூர், டிச 30 – MACC தடுப்புக்காவலின் போது தாங்கள் MACC அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக 3 போலிஸ்காரர்கள் செய்துள்ள புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றும் அது குறித்து எந்த ஒரு தரப்பினருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் லத்திபா கோயா தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்து விசாரிப்பதில் MACC முறையான SOP எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையை கையாண்டு வருகிறது. இதில் இதுபோன்ற முறைகேடுகள் இடம்பெறுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் லத்திபா தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 24 மற்றும் 26ஆம் தேதிகளில் தடுத்து வைக்கப்பட்ட சுங்கை பூலோ போதைப்பொருள் குற்றச்செயல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அந்த 24, 25 மற்றும் 26 வயதான 3 போலிஸ் அதிகாரிகளும் ஷா ஆலாம் MACC தலைமையகத்தில் தடுப்புக்காவலின் விசாரணையின் போது அறையப்பட்டு, குத்தப்பட்டு பின்னர் கால்களால் எத்தப்பட்டதாகவும் போலிஸ் புகார் வழங்கியிருந்தனர்.
இதனை மறுத்த MACC அதிகாரிகளும் இது பொய்யான புகார் என்று டிசம்பர் 27ஆம் தேதியன்று போலிஸ் புகாரை கொடுத்திருந்தனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!