Latestமலேசியா

KL SENTRAL நிலையம் இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை மூடப்படும்

பெட்டாலிங், மார்ச் 26 – மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு முடிவடையும் வரை KL SENTRAL நிலையம் இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை மூடப்படும் என Developer Malaysian Resources Corporation Bhd தெரிவித்துள்ளது. இங்குள்ள பொருட்கள் ஏற்றும் இடம், கார் நிறுத்துமிடம், ரயில் தடங்கள் மற்றும் NU Sentral ஆகியவை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மத்திய நிலையத்தின் 2-ஆவது மாடி அவசர நிலைக்கு மட்டுமே திறந்து வைக்கபட்ட போதிலும் போலீசார் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இக்காலகட்டத்தில் பொது போக்குவரத்து சேவைகளான KTM, ERL, KLIA Express, Klia Transit, மற்றும் ETC ஆகியவை காலை 6 மணியிலிருந்து 10 மணிவரையும் மாலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும். மேலும், RapidKL, GoKL, Smart Selangor போன்ற பொது போக்குவரத்து பேருந்து சேவைகள் வரையறுக்கப்பட்ட நேரம் கட்டுப்பாட்டில் செயல்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!