Latestமலேசியா

B40 தரப்பினருக்கு டயாலிசிஸ் உதவித் திட்டம்

கோலாலம்பூர், பிப் 6 – டயாலிசிஸ் எனப்படும் சிறுநீரக சுத்திகரிப்பை மேற்கொள்வதறகு வசதியற்ற B40 தரப்பினருக்கு உதவுவதற்காக முன்னோடி திட்டம் ஒன்று முதல் கட்ட குழுவினருக்கு  தொடங்கப்பட்டது. டயாலிசிஸ் செய்வதற்கு சமூக நல ஆதரவு அல்லது சொக்சோ எனப்படும் பாதுகாப்பு இயக்கத்தின் உதவி கிடைக்காதவர்களுக்க இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இத்திட்டத்தை பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி அதிகாரப்பூர்வமாக  தொடக்கி வைத்தார்.

ஓராண்டுகால நடவடிக்கை திட்டதின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்வதற்கு குறைந்த வருமானம் பெரும் தரப்பை சேர்ந்த 99 நோயாளிகளுக்கு 29 லட்சம் வெள்ளியை மித்ரா ஒதுக்கி இருப்பதாக  பி.வேதமூர்த்தி தெரிவித்தார்.

மித்ரா மற்றும் செண்ட் ஜோன் ஆம்புலன்ஸ் சங்கம், பௌத்த Tzu Chi மெரிட் மலேசிய சங்கம் மற்றும் சாய் ஆனந்த அற நிர்வனம்  ஆகிய மூன்று அரசுசார்பாற்ற இயக்கங்களில் ஒத்துழைப்போடு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!