Latestமலேசியா

6 மாத குழந்தை சித்திரவதையா? குழந்தை பராமரிப்பாளர் கைது

ஜோர்ஜ்டவுன், நவ.16 – 6 மாத குழந்தையை தலையில் அடித்து, தரையில் தள்ளி விடுவது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில்  வைரலாக பரவி  வருகின்றது.

இக்காணொளி வைரலானதில், வங்கி ஊழியர் ஒருவர் அளித்த  புகாரின் அடிப்படையில்  கடந்த புதன் கிழமை  குழந்தை பராமரிப்பாளரான அந்த 34 வயது பெண்ணை  போலீசார் கைது செய்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் அந்த கணொளியில் இருப்பது தான் என்றும், குழந்தையிடம் கடினமாக நடந்து  கொண்டேனே தவிர  கொடுமைப்படுத்தும் நோக்கில் அல்ல ; மேலும் இச்சம்பவம் எப்பொழுது நிகழ்ந்தது என்பது தமக்கு நினைவில்லை என்று அப்பெண் கூறியதாக போலிசார் தெரிவித்தனர்.

இதனிடையே, அக்குழந்தையின் தாயாரிடம் இது குறித்து விசாரித்த  போது, பராமரிப்பு வீட்டிலிருந்து அழைத்து வரும் போது, குழந்தையிடம் எந்த ஒரு மாற்றமும் தென்படவில்லை.  மேலும், குழந்தையின் உடலில் வீக்க காயங்கள் எதுவுமின்றி  நலமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் பரிசோதனையிலும் குழந்தையின் உடலில் துன்புறுத்தப்பட்டதற்கான தழும்புகள் எதுவும் இல்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாக போலிசார்  தெரிவித்தனர்.

இச்சம்பவம் குழந்தைகள் சட்டம் 2001, பிரிவு 31 (1) இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!