
கோலாலம்பூர், டிச 2 – நாட்டில் இதுவரை 3877 பொய்யான சமூக வலைத்தள கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுல் 78 விழுக்காட்டு கணக்குகள் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்தால் அகற்றப்பட்டுள்ளன என இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
ஏமாற்றும் நோக்கில் திறக்கப்பட்டதால் அந்த போலி கணக்குகள் அகற்றப்பட்டதாக தொடர்பு பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
சில நிபந்தனைகஊடன் சமூக வலைத்தள நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அவை அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இணைய பகடி தொடர்புடைய 1564 இணைப்புகளும் கண்டறியப்பட்டு அவற்றில் 63 விழுக்காடு அகற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.