Latestமலேசியா

29,000 வர்த்தகக் குற்றங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை- ஐஜிபி

கோலாலம்பூர், நவ. 7 – 2005 ஆம் ஆண்டிலிருந்து 29,000 வர்த்தகக் குற்றங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதாகப் போலீஸ் தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

பொதுமக்கள் அதுபற்றிப் போலீசாரைக் குறைகூறுவதாகக் குறிப்பிட்ட அவர், அதற்குப் பல காரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவை தீர்க்கப்படாததற்குப் புலனாய்வு அதிகாரிகள் அடிக்கடி இடம் மாற்றப்படுவது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவை கவனக் குறைவால், சோம்பலினால் அல்லது குறிப்பிட்ட நபரைக் காப்பாற்ற வேண்டி கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருந்தால், அது பற்றி விசாரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!