Latestமலேசியா

2505 புள்ளிகளைப் பெற்றார் சைக்கிளோட்ட வீரர் அஸிஸுல் ஹஸ்னி அவாங்

கோலாலம்பூர், நவ 5- நட்டின் சைக்கிளோட்ட வீரரான அஸிஸுல் ஹஸ்னி அவாங் சைக்கிளோட்ட போட்டியின் கெய்ரின் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார். கடந்த வாரம் நடைபெற்ற அனைத்துலக சைக்கிளோட்ட சம்மேளன போட்டியில் அவர் 2505 புள்ளிகளை பெற்றார்.

இரண்டாம் இடத்தை பிடித்த அஸிஸுல், 540 புள்ளிகளுடன் சேர்த்து 2505 புள்ளிகளைப் பெற்றார். இதனிடையே, ஜப்பான் சைக்கிளோட்ட வீரர் யுடாய் நீத்தா 2850 புள்ளிகள் பெற்று முதல் நிலையில் இருக்கிறார்.

இந்த புதிய புள்ளிகளின் நிலவரம் நாட்டின் சைக்கிளோட்ட வீரருக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளதுடன் அடுத்த மாதம் ஹாக் காங்கில் நடைபெறவிருக்கும் உலக கிண்ணத்திலும் சிறப்பாக பங்குகொள்ள முடியுமென்றும் உலக அரங்கில் சிறந்த சைக்கிளோட்ட வீரராக மிளிர முடியும் என்றும் நம்பப்படுகிறது.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!