Latestஉலகம்

25,000த்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஹூபேய்க்கு அனுப்பப்பட்டனர்

பெய்ஜிங்,  பிப் 15 –  கோவிட் 19 வைரஸினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஹூபேய் மாநிலத்திற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்காக சீனா முழுமையிலும் சேர்ந்த 25,000த்திற்கும் மருத்துவர்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தற்போது 25,633 மருத்துவர்கள் 217 குழுக்களாக செய்ல்பட்டு மருத்துவ சிகிச்சை மற்றும் உதவிகளை வழங்கி வருவதாக சீனாவின் சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் WANG HESHENG கூறினார். இந்த மருத்துவர் குழுவில் சீன ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சேர்க்கப்படவில்லை என அவர் சொன்னார்.

கோவிட் வைரஸ் பாதிப்பின் முக்கிய மையமாக திகழும் வூஹான் நகரில் மட்டும் 181 குழுக்களைச் சேர்ந்த 20,374 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். சீனா மற்றும் இதர 25க்கும் மேற்பட்ட நாடுகளில் கோவிட் வைரஸ் பரவியதைத் தொடர்ந்து உலகளாவிய சுகாதார அவசர நிலையை கடந்த ஜனவரி மாதம் உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியது .

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!