Latestமலேசியா

2020 சீன ஆண்டின் அதிர்ஷ்ட பிராணி எலி; நன்கு விற்பனையாகும் “Hamsters” – கைவிடப்படும் அபாயமும் அதிகம்

கோலாலம்பூர், ஜன 17 – 2019க்கு நாம் விடைக்கொடுத்துவிட்டோம். சீனர்களின் நாள்காட்டிபடி இவ்வாண்டு எலி ஆண்டாகும். சீனப்புத்தாண்டை அதிர்ஸ்டமாக கருதும் சீனர்கள் மத்தியில் அண்மைய காலமாக “ட்ரெண்டாகி” வருவது “Hamsters” வளர்ப்பாகும்.

“Hamsters” எலி இல்லை என்றாலும் அது எலி வகை பிராணியாகவே கருதப்படுவதால், தங்களுக்கு அதிர்ஸ்டம் எனக் கருதி “Hamster”களை வாங்குவதில் சீனர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். இது வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடைக்காரர்களுக்கு லாபகரமான நேரம் என்றாலும், பிராணிகள் பிரியர்கள் மத்தியில் ஒரு வகை கலக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது.

காரணம், தற்போதைய ட்ரெண்ட் மற்றும் அதிர்ஸ்டம் எனக்கூறி இந்த சின்னஞ்சிறு விலங்குகளை வாங்குபவர்கள், அதன் மோகம் முடிந்தபின் அதன் கைவிடக்கூடாது என்பதே. சில வருடங்களுக்கு முன்பு நாய் வருடம் வந்தபோது, நாய் விற்பனை அதிகரித்தது. அதன் பிறகு கைவிடப்பட்ட நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
உண்மையாக வளர்ப்பு பிராணி வேண்டும் என்பவர்களும், அதனை நன்கு பேணி வளர்க்க முடியும் என்பவர்கள் மட்டுமே இந்த வாயில்லா ஜீவன்களை வாங்குங்கள் என சில விலங்கு பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!