Latestமலேசியா

1MDB நிதி முறைகேடு : 9 ஒலிப்பதிவு நாடாக்கள்  குறித்து பிரதமருக்கு விளக்கம்

கோலாலம்பூர், ஜன 10 – எம்.டி.பி ஊழலை மூடி மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக நஜீப் ரசாக் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய   9 ஒலிப்பதிவுகள்  குறித்து  பிரதமர் டாக்டர் மகாதீருக்கு இன்று விளக்கம் அளிக்கப்பட்டது. இன்று அல்புஹாரி அறநிறுவனத்தில்  சுமார்  30 நிமிடங்கள் மகாதீரை   எம்.ஏ.சி.சி  தலைமை ஆணையணர் லத்திபா கோயா சந்தித்ததாக  தெரிகிறது.

முன்னாள் பிரதமர்  நஜீப். அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர், முன்னாள் அரசு தரப்பு வழக்கறிஞர் சுல்கிப்ளி அகமட்,,ஐக்கிய அரபு சிற்றரசின்  பட்டத்து இளவரசர் முகமட் பின் ஷாயட் அல் நாயான் ஆகியோரின் குரல்கள் அந்த ஒலி பதிவில் பதிவாகியள்ளது. இந்த  உரையாடல்களை  கொண்ட  ஒலிப்பதிவு இன்னும் மகாதீரிடம் காட்டப்படவில்லையென லத்திபா தெரிவித்தார். தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது சட்ட ரீதியில்  தவறு என் பல தரப்பினர் குறைகூறியுள்ளனர்.

இந்த குறைகூறல்களை  புறக்கணித்த  லத்திபா சம்பந்தப்பட்ட ஒலிப்பதிவுகளை போலீசிடம் ஒப்படைத்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!