Latestஉலகம்

170 பயணிகளுடன் உக்ரேய்ன் விமானம் ஈரானில் விபத்துக்குள்ளானது

துபாய், ஜன 8  – தெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து உக்ரைய்ன் தலைநகர்  கியூவிற்கு சென்று கொண்டிருந்தபோது உக்ரேய்ன் விமானம் ஒன்று   விபத்திற்குள்ளானது.  இயந்திரக் கோளாறு  காரணமாக   அந்த விமானம் விபத்திற்குள்ளானதாக  ஈரான் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த விமானத்தில் இருந்த அனைவரும் மாண்டதாக ஈரான் செம்பிறை சங்கம் மற்றும் அரசு சார்பற்ற மனிதாபிமான உதவி இயக்கத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைய்ன் அனைத்துலக விமான நிறுவனத்திற்கு  சொந்தமான அந்த போயிங் 737  விமானம்  ஈரானின்  இமாம் காமினி விமான நிலையத்திற்கு அருகிலேயே விபத்திற்குள்ளானது.

அந்த விமானத்தில் தீப்பிடித்ததாகவும் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாக    ஈரான் சிவில் விமான  போக்குவரத்து சங்கத்தின் பேச்சாளர் கூறினார். தீயின் உக்கிரம் மிகவும் கடுமையாக இருந்ததால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என ஈரனின் அவசர சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பிர்ஹூசேன் கோலிவான் தெரிவித்தார்.

 

 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!