Latestமலேசியா

150 கொல்கலன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்ட நாடுகளுக்கு மலேசியா திருப்பி அனுப்பியது

கோலாலம்பூர், ஜன 20 –  3,737 டன் எடையை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்யப்பட்ட நாடுகளுக்கே எந்தவொரு செலவுமின்றி மீண்டும் மலேசியா அனுப்பியுள்ளது. மலேசியாவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை அனுப்பிவைக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை துடைத்தொழிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக எரிபொருள், அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் யோ பீ யின் கூறினார்.

இன்றுவரை சுற்றுச்சூழல் துறை மூலமாக அமைச்சு 150 கொள்கலன்களைக் கொண்ட மலேசியாவுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 3,737 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இங்கு அனுப்பப்பட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் சொன்னார். பட்டர்வெர்த்திலுள்ள பிளாஸ்டிக் கழிவு பகுதிக்கு வருகை புரிந்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது யோ பீ யின் இதனைத் தெரிவித்தார்.

இந்த பிளாஸ்டிக் கழிவுகளை திரும்ப அனுப்பிவைப்பத்தில் அரசாங்கத்திற்கு எந்தவொரு செலவும் ஏற்படவில்லை .இதற்கான செலவை ஏற்றுமதியாளர்கள் அல்லது கப்பல் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் சொன்னார். அரச மலேசிய சுங்கத்துறையிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் துறைமுகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் இந்த பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்ட பெரும்பாலான கொள்கலன்கள் பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா,கனடா ,ஸ்பெய்ன் மற்றும் ஜப்பான் உட்பட மேம்பாடு அடைந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளின் சட்டவிரோத இறக்குமதியை முழுமையாக துடைத்தொழிப்பதற்காக கூட்டு அமலாக்க நடவடிக்கை தொடரப்படும் என்றும் யோ கூறினார்.பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கான தேசிய நடவடிக்கை திட்டத்தை இவ்வாண்டு பிப்ரவரி மாதம் எரிபொருள் அமைச்சு தொடங்கும் என்றும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!